search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டது
    X

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டது

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோவ்வின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. #NZvENG #Bairstow
    கிறிஸ்ட்சர்ச்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 94 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. டிம் சவுத்தி, போல்ட் அபாரமான பந்துவீச்சில் ரன் எடுக்க திணறியது.



    அதன்பின் பேர்ஸ்டோவ்- பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினர். ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், ஸ்டுவர்ட் பிராட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் இருந்த பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு மார்க்வுட் உறுதுணையாக இருந்தார். இருவரும் அரை சதம் அடித்தனர். மார்க்வுட் 52 ரன்னில் அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.

    கடைசியாக முதல் நாள் ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் இங்கிலாந்து குவித்தது. பேர்ஸ்டோவ் 97 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை ஆட்டம் தொடங்கியதும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvENG #Bairstow
    Next Story
    ×