search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் பந்து வீச்சு அனுபவம் மிகப்பெரிய வித்தியாசம் என்கிறார் ஒட்டிஸ் கிப்சன்
    X

    இந்தியாவின் பந்து வீச்சு அனுபவம் மிகப்பெரிய வித்தியாசம் என்கிறார் ஒட்டிஸ் கிப்சன்

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவின் பந்து வீச்சு அனுபவம் மிகப்பெரிய வித்தியாசம் என தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. த்ரில்லாக சென்ற இந்த போட்டியில் இந்தியா 7 ரன்கள் வி்ததியாசத்தில் வெற்றி பெற்றது.

    பவல் பிளே ஆன முதல் 6 ஓவரில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். குறிப்பாக புவனேஸ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி குறைந்த ரன்களே விட்டுக்கொடுத்தார். அதேபோல் கடைசி ஓவரை சிறப்பாக வீசியதால் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்றது.

    டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியின் பந்து அனுபவத்திற்கும், இந்தியாவின் பந்து வீச்சு அனுபவத்திற்கு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்று தென்ஆப்பிரிக்கா அணி தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.

    டி20 தொடரை இழந்த பின், ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில ‘‘அனுபவம் மிகப்பெரிய வித்தியாசம். இந்தியா புவனேஸ்வர் குமார், பும்ரா என்ற மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களை பெற்றுள்ளது. நாங்கள் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜூனியர் டாலா ஆகியோர் வைத்துள்ளோம். இதில் டாலா அறிமுக வீரர்.

    அவர்கள் இருவரும் (புவனேஸ்வர் குமார், பும்ரா) இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் மட்டுமல்ல. 3 முதல் நான்கு வருடங்கள் ஐபில் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளது. இதை தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.



    ஜூனியர் டாலா தனது வழக்கான பந்து வீச்சை வெளிப்படுத்தும்போது, கிறிஸ் மோரிஸ் இன்னும் அதிக அளவில் தனது பொறுப்பை செய்ய வேண்டியுள்ளது. அவர் எங்கள் அணியின் மேட்ச் வின்னர். ஆனால், தொடர்ந்து ஒரே நிலையான பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    நாம் என்ன மாதிரியான பந்து வீச்சாளர், நாம் எப்படி ஆக போகிறோம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து அவரிடம் நான் பேசினேன். ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன், கிறிஸ் மோரிஸ் சில உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×