search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்த டெய்லர்
    X
    சதம் அடித்த டெய்லர்

    முதல் ஒருநாள் போட்டியில் 14 பந்தில் 34 ரன்கள் அடித்து இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

    முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ராஸ் டெய்லர், சான்ட்னெர் இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. #NZvENG
    நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். அதன்பின் வந்த ஜோ ரூட் 71 ரன்களும், பட்லர் 79 ரன்களும் அடிகக் இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது.


    71 ரன்கள் சேர்த்த ஜோ ரூட்

    பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (13), கொலின் முன்றோ (6), கேன் வில்லியம்சன் (8) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டாம் லாதம் 84 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த நிக்கோல்ஸ் (0), கிராண்ட்ஹோம் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 41.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. 49 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராஸ் டெய்லருடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 12 பவுண்டரியுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது நியூசிலாந்து 45.5 ஓவரில் 244 ரன்கள் எடுத்திருந்தது.


    பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டெய்லர்


    கடைசி 25 பந்தில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 8-வது விக்கெட்டுக்கு சான்ட்னெர் உடன் சவுத்தி ஜோடி சேர்ந்தார். டெய்லர் அவுட்டானாலும் சான்ட்னெர் அதிரடி ஆட்டத்தை கைவிடவில்லை. 47-வது ஓவரை குர்ரான் வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 7 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவையிருந்தது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்தார்கள்.

    8-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் சான்ட்னெர். அதன்பின் ஒரு வைடுடன் சேர்த்து 4 ரன்கள் கொடுத்தார். இதனால் நியூசிலாந்து 16 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை குர்ரான் வீசினார். இந்த ஓவரில் சான்ட்னெர் ஒரு பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து 9 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.


    அணியை வெற்றி பெற வைத்த சந்தோசத்தில் சான்ட்னெர்

    கிறிஸ் வோக்ஸ் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தை சான்ட்னெர் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தை வைடாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் இமாலய சிக்ஸ் விளாசினார் சான்ட்னெர். இதனால் 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சான்ட்னெர் 27 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 45 ரன்கள்  எடுத்தும், டிம் சவுத்தி 7 பந்தில் 8 ரன்னும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது ஆட்டம் வரும் 28-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×