search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிடில் ஆர்டர் சொதப்பலால் கோவா அணியிடம் வீழ்ந்தது தமிழ்நாடு
    X

    மிடில் ஆர்டர் சொதப்பலால் கோவா அணியிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

    விஜய் ஹசாரே டிராபியில் மிடில் ஆர்டர் சொதப்பலால் கோவா அணியிடம் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழ்நாடு. #Vijayhazaretrophy
    மாநில அணிகளுக்கு இடையில் 50 ஓவர் போட்டியாக நடத்தப்படும் விஜய் ஹசாரே டிராபி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அணி தொடக்க நாளில் குஜராத் அணியை எதிர்கொண்டது. கவுசிக் காந்தி, விஜய் சங்கர் ஆகியோரின் சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தமிழ்நாடு 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு இன்று கோவா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவுசிக் காந்தி, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய போட்டியில் ஜொலிக்காத முரளி விஜய் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 89 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து பாபா அபரஜித் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய கவுசிக் காந்தி 43 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த விஜய் சங்கர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்து பெவிலியன் திரும்பினார். பாபா அபரஜித் 52 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார். என். ஜெகதீசன் (7), அஸ்வின் (8), ஜே. கவுசிக் (1), யோ மகேஷ் (3), அஸ்வின் கிறிஸ்ட் (6) சொற்ப ரன்களில் வெளியேற தமிழ்நாடு 48.5 ஓவரில் 210 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஸ்வாப்னில் அஸ்னோத்கர் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க, 46.2 ஓவரில் 211 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவா. அஸ்னோத்கர் 112 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 103 ரன்கள் சேர்த்தார்.
    Next Story
    ×