என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் ஷாஸர் ரிஸ்வி, பூஜா கத்கர் தங்கம் வென்று சாதனை
Byமாலை மலர்1 Nov 2017 8:24 AM GMT (Updated: 1 Nov 2017 8:24 AM GMT)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஷாஸர் ரிஸ்வி மற்றும் பூஜா கத்கர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
பிரிஸ்பேன்:
காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷாஸர் ரிஸ்வி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய விராங்கனை பூஜா கத்கர் தங்கம் வென்றார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஹீனா சித்து தங்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி வென்றார்.
Next Story
×