என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது
Byமாலை மலர்1 Nov 2017 4:10 AM GMT (Updated: 1 Nov 2017 4:10 AM GMT)
இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இது நெஹரா விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும்.
புதுடெல்லி:
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கிறது.
ஒரு நாள் தொடரில் நியூசிலாந்தின் சவாலை முறியடித்து தொடரை வசப்படுத்திய இந்திய அணி, அதே போன்று 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து ‘நம்பர் ஒன்’ அணி என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
முன்னாள் உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற முன்னணி அணிகளை எல்லாம் வீழ்த்தி இருக்கிறது. ஆனால் ஏனோ, நியூசிலாந்தை மட்டும் இதுவரை போட்டுத்தாக்க முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 இருபது ஓவர் போட்டிகளிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு உலக கோப்பையில் தோற்றதும் இதில் அடங்கும்.
இந்த நீண்ட கால சோகத்துக்கு விராட் கோலி தலைமையிலான படையினர் முடிவுகட்டி வரலாறு படைக்கும் வேட்கையில் இருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா சதங்கள் அடித்து அசத்தினர். பந்து வீச்சில் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் பார்மில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, டோனி, தவான் ஆகியோரும் நல்ல நிலையில் இருப்பது இந்திய அணியை வலுப்படுத்துகிறது. ஆனால் புதுமுகங்கள் ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு இது கடைசி சர்வதேச போட்டி என்பதால், அனேகமாக புவனேஷ்வர்குமார் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நீடித்த 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பவும் இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அவ்வளவு எளிதில் பணிந்து விடவில்லை. குறிப்பாக கடைசி ஒரு நாள் போட்டியில் 338 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வெற்றியை நெருங்கி வந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வி கண்டது. மிடில் வரிசையில் ராஸ் டெய்லர், டாம் லாதம், நிகோல்ஸ் ஆகியோரின் பேட்டிங், கேப்டன் வில்லியம்சனுக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.
தங்களது பிடியை விட்டுக்கொடுக்காமல் 20 ஓவர் தொடரிலும் மிரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இது குறுகிய வடிவிலான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த மைதானத்தில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரில் 4 ஆட்டங்கள் நடந்தன. அதே சமயம் இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், பும்ரா அல்லது புவனேஷ்வர்குமார், நெஹரா, யுஸ்வேந்திர சாஹல்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட் ஹோம், சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story
×