search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்.: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் த்ரில் வெற்றி
    X

    டி.என்.பி.எல்.: மதுரை அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் த்ரில் வெற்றி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    திருச்சி அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பரத் ஷங்கர் மற்றும் இந்திரஜித் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தது. பரத் ஷங்கர் 47 பந்துகளில் 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில் இந்திரஜித் 37 பந்துகளில் 70 ரன்களை விளாசினார்.

    அடுத்து களமிறங்கிய நிலெஷ் சுப்ரமணியன் 15 பந்துகளில் 35 ரன்களை குவித்த நிலையில் கௌஷிக் 13 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அடுத்து 188 ரன்களை சேசிங் செய்தது.

    மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியில் அருண் கார்திக் மற்றும் சந்திரன் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அருண் கார்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 34 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுன்டரிகளை அடித்து மொத்தம் 79 ரன்களை குவித்து அகில் ஸ்ரீநாத் பந்தில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய  சந்திரன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்தடுத்து மதுரை அணி வீரர்கள் ரன் குவிக்காமல் ஆட்டமிழக்க எல். விக்னேஷ் பொறுப்புடன் விளையாடினார். எனினும் மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறினர். கடைசி ஓவரில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டு விக்கெட் கைவசம் இருந்தது.



    ஆறு பந்துகளில் மூன்று ரன்களை தேவைப்படும் நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பொய்யாமொழி முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சந்திரசேகர் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ரூபி திருச்சு வாரியர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
    Next Story
    ×