என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நியூசிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன்: பிரனோய், காஷ்யப், சவுரப், சிரில் முன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்2 Aug 2017 5:18 PM IST (Updated: 2 Aug 2017 5:18 PM IST)
நியூசிலாந்தில் நடந்துவரும் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு இந்திய வீரர்கள் பிரனோய், காஷ்யப், சவுரப் வர்மா, சிரில் வர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
வெலிங்டன்:
நியூசிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கின. இப்போட்டிகள் இம்மாதம் 6ம் தேதி வரை நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனோய், காஷ்யப், அஜய் ஜெயராம், சவுரப் வர்மா, சிரில் வர்மா, பிரதுல் ஜோஷி, சகில் சிபானி மற்றும் நீரஜ் ஆகியோர் விளையாடினர்.
தரவரிசையில் நான்காம் நிலையில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், இந்தோனேசியாவின் அப்துல் கோலிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 23-21, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் பிரனோய் வென்றார்.
மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் காஷ்யப், நியூசிலாந்தின் ஆஸ்கார் குவோவை 21-9, 21-8 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.
இந்தியாவின் சவுரப் வர்மா, இந்தோனேசியாவின் ஹென்ரிகோ கோ விபோவோவை 21-16, 21-16 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சிரில் வர்மா, இந்தோனேசியாவின் சபுத்ரா விக்கியை 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்ற இந்திய வீரர்களான பிரதுல் ஜோசி, நீரஜ், சகில் சிபானி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
Next Story
×