search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தூத்துக்குடி அணி 2-வது வெற்றியை பெறுமா?- திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்: தூத்துக்குடி அணி 2-வது வெற்றியை பெறுமா?- திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் திருச்சி வாரியர்சும் பலபரீட்சை நடத்துகின்றனர்.
    நத்தம்:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

    2-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வென்றது. 3-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

    நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெய்ன்டை வென்றது. முதலில் ஆடிய மதுரை அணி 19.1 ஓவரில் 117 ரன்னில சுருண்டது. சுரேஷ்குமார் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார். சன்னிகுமார்சிங் 3 விக்கெட்டும், டி.நடராஜன், சஞ்சய், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 10.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்தது. சுப்பிரமணிய சிவா 41 பந்துகளில் 84 ரன்னும், 10 பவுண்டரி, 6 சிக்சர், கங்கா ஸ்ரீதர் ராஜூ 32 ரன்னும் எடுத்தனர்.

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியின் 5-வது ஆட்டம் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தூத்துக்குடி அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி திருச்சி வாரியர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×