search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்:  திருவள்ளூர் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    X

    டி.என்.பி.எல்: திருவள்ளூர் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் திருவள்ளூர் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் திருவள்ளூர் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



    டாஸ் வென்ற திருவள்ளூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் என்.எஸ். சதுர்வேது, சி ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிசாந்த் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த பி. அபராஜித் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் சதுர்வேது 22 பந்தில் 35 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் ராஜன் 14 ரன்னும், அபிஷேக் தன்வார் 17 பந்தில் 25 ரன்களும் எடுக்க, திருவள்ளூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் சதிஷ் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களத்தில் இறங்கியது. தொடக்க வீரர்களாக கோபிநாத், தலைவன் சற்குணம் களம் இறங்கினர். தலைவன் சற்குணம் 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கோபிநாத்துடன் கார்த்திக் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.

    அணியின் ஸ்கோர் 87 ஆக உயர்ந்த போது கார்த்திக் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து சரவணன் (18) சதீஷ் (0) அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் கோபிநாத் 54 ரன்கள் எடுத்து இறுதிவரை  ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.3 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×