என் மலர்

  செய்திகள்

  டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி
  X

  டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி.
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

  டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தூத்துக்குடி அணியின் வாஷிங்டன் சுந்தர், கவுசிங் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் தூத்துக்குடி அணி முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவரில் 107 ரன்கள் குவித்தது. காந்தி 33 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வாஷிங்டன் சுந்தர் 48 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

  அடுத்து வந்த நாதன் 20 ரன்னும், ஆனந்த் சுப்பரமனியன் 17 பந்தில் 26 ரன்களும் எடுக்க தூத்துக்குடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாடி வருகிறது.
  Next Story
  ×