search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் டிராவிட் இந்திய சீனியர் அணியோடு செல்லமாட்டார்: வினோத் ராய்
    X

    ராகுல் டிராவிட் இந்திய சீனியர் அணியோடு செல்லமாட்டார்: வினோத் ராய்

    ராகுல் டிராவிட் இந்திய சீனியர் அணியோடு செல்ல மாட்டார் என்று பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். ஆனால், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு தொடர்களில் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்தது. ஜாகீர் கான், ராகுல் டிராவிட்டின் பெயர் பரிந்துரை மட்டும்தான். அதை எங்களால் ஏற்க இயலாது என்று கூறிய நிர்வாகக்குழு, ரவி சாஸ்திரியிடம் ஆலோசனைக் கேட்டு பாரத் அருணை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்தது.

    தற்போது ராகுல் டிராவிட் சீனியர் அணியோடு செல்லமாட்டார் என்று நிர்வாகக்குழு தலைலர் வினோத் ராய் கூறியுள்ளார்.

    இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குபட்டோருக்கான அணியுடன் ராகுல் டிராவிட்டுக்கு பணி இருப்பதால், இந்திய சீனியர் அணியுடன் செல்லமாட்டார்.

    டிராவிட்டின் ஒப்பந்தம் குறித்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்தியா ‘ஏ’ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு தொடரின்போது சீனியர் அணியுடன் செல்ல முடியாது என்று அவர் கூறிவிட்டார். அணியுடன் எல்லா இடங்களுக்கும் சுற்றித்திரிய அவர் விரும்பவில்லை.

    தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது, ரவி சாஸ்திரி விரும்பினால் ராகுல் டிராவிட் ஆலோசகராக செயல்படுவார்’’ என்றார்.
    Next Story
    ×