என் மலர்

  செய்திகள்

  யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், பிரணாய், மனு- சுமித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
  X

  யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், பிரணாய், மனு- சுமித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் காஷ்யப், பிரணாய், மனு - சுமித் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
  அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர்கள் காஷ்யப் - சமீர் வர்மா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் காஷ்யப் 21-13, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் காஷ்யப், கொரிய வீரர் குவாங் ஹீ ஹியோவை எதிர்கொள்கிறார்.  பிரணாய் ஜப்பான் வீரர் கன்டா டிசுனேயமா-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என இழந்த பிரணாய், பின்னர் 21-15, 21-18 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பிரணாய் அரையிறுதியில் வியட்நாம் வீரரை எதிர்கொள்கிறார்.

  ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மனு - சுமீத் ஜோடி ஜப்பான் ஜோடியை 21-18, 22-20 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
  Next Story
  ×