என் மலர்

  செய்திகள்

  யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், சமீர் வர்மா, பிரணாய் காலிறுதிக்கு முன்னேற்றம்
  X

  யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், சமீர் வர்மா, பிரணாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யு.எஸ். ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
  அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் காஷ்யப் தனது 2-வது சுற்றில் இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை 21-19, 21-10 என நேர்செட்டில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

  முதல் சுற்றில் ஹங்கேரி வீரருக்கு எதிராக விளையாடும்போது, 21-18, 17-6 என காஷ்யப் முன்னிலையில் இருக்கும்போது எதிர்த்து விளையாடிய வீரர் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  காஷ்யத் காலிறுதியில் இந்தியாவைச் சேர்ந்த சமீர் வர்மாவை எதிர்கொள்கிறார். சமீர் வர்மா குரோஷியா மற்றும் பிரேசில் வீரர்களை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  மற்றொரு வீரர் பிரணாய் அயர்லாந்து வீரரை 21-13, 21-17 எனவும், நெதர்லாந்து வீரரை 21-8, 14-21, 21-16 எனவும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரணாய் காலிறுதியில் ஜப்பான் வீரரை எதிர்கொள்கிறார்.

  ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றம் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர்.
  Next Story
  ×