search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை அணிக்கு சுழற்கோப்பை வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை அணிக்கு சுழற்கோப்பை வழங்கிய போது எடுத்தபடம்.

    மாநில அளவிலான கைப்பந்து போட்டி: பெண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும் முதலிடத்தை பிடித்தது.
    தர்மபுரி :

    தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தர்மபுரி பாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கைப்பந்து போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளை தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தொடங்கி வைத்தார்.

    ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தர்மபுரி பாய்ஸ் கிளப் அணி 2-ம் இடத்தையும், சேலம் பாய்ஸ் கிளப் அணி 3-ம் இடத்தையும் பெற்றன. இதேபோன்று பெண்கள் பிரிவு போட்டியில் சென்னை ஜெ.பி.ஆர்.கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஈரோடு பி.கே.ஆர். அணி 2-ம் இடத்தையும், சேலம் சாய் விடுதி அணி 3-ம் இடத்தையும் பெற்றன.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் போட்டிகளை நடத்திய நடுவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×