என் மலர்
செய்திகள்

மொனாக்கோவில் அடுத்த மாதம் நடைபெறும் 100மீ ஓட்ட பந்தயத்தில் போல்ட் பங்கேற்பு
மொனாக்கோவில் அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெற இருக்கும் ஐஏஏஎஃப் டைமண்ட் லீக் தடகளத்தில் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் கலந்து கொள்கிறார்.
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பவர் உசைன் போல்ட். கடந்த மூன்று ஒலிம்பிக் தொடரிலும் 100மீட்டர், 200மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்க பதக்கம் வென்று அசத்தியர்.
அடுத்த மாதம் 21-ந்தேதி மொனாக்கோவில் ஐஏஏஎஃப் டைமண்ட் லீக் தடகளம் நடைபெறுகிறது. இதில் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் கலந்து கொள்கிறார். இந்த தகவலை போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு மொனாக்காவில் ஓடியபின்னர், தற்போது 7 ஆண்டுகளுக்குப்பிறகு மொனாக்கோவில் ஓட இருக்கிறார். 2011-ல் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.88 வினாடிகள் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நடைபெற இருக்கும் உலக சாம்பயின்ஷிப் தடகள போட்டியுடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.

Next Story