search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக ஆக்கி லீக்: கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா இன்று மோதல்
    X

    உலக ஆக்கி லீக்: கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா இன்று மோதல்

    உலக ஆக்கி லீக் கால்இறுதி ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, மலேசியாவுடன் இன்று மோதுகிறது.
    லண்டன்:

    உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. தென்கொரியா, ஸ்காட்லாந்து அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்தன. அவ்விரு அணிகளும் 9-வது இடத்துக்காக மோத உள்ளன.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, மலேசியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் கால்இறுதிக்கு முன்னேறியது. மலேசிய அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் கால்இறுதிக்குள் நுழைந்தது. வலுவான அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-பாகிஸ்தான், நெதர்லாந்து-சீனா, இங்கிலாந்து-கனடா அணிகள் சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1,2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    இந்திய பயிற்சியாளர் ரோலன்ட் ஒல்ட்மான்ஸ் கூறுகையில், ‘இந்த போட்டியில் கால்இறுதியில் இருந்து தான் உண்மையான சவால் தொடங்குகிறது. அதற்கு ஏற்ற வகையில் முன்னணி அணிகள் தங்களது யுக்திகளை மாற்றிக்கொண்டு ஆடும்’ என்றார்.
    Next Story
    ×