என் மலர்

  செய்திகள்

  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அணி வென்றதும் காஷ்மீர் இளைஞர்கள் கொண்டாட்டம்
  X

  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் அணி வென்றதும் காஷ்மீர் இளைஞர்கள் கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும் காஷ்மீரில் பல இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஜம்மு:

  ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் நேற்றிரவு தோற்கடித்தது.

  இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. என்றாலும் உண்மையான ரசிகர்கள், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆதரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

  இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள இளைஞர்கள், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ஒரு விளையாட்டாக பார்க்காமல், அதை பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் பார்த்தனர். பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும் காஷ்மீரில் பல இடங்களில் தீவிரவாதிகள் தூண்டுதலின் பேரில் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தெருக்களில் திரண்ட இளைஞர்கள் இந்தியாவை எதிர்த்து கோ‌ஷமிட்டனர். பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்டனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.  சில இடங்களில் இளைஞர்கள் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை ஏந்தியபடி சென்றனர். அதை மத்திய போலீஸ் படையினர் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

  ஒரு இடத்தில் காஷ்மீர் இளைஞர்கள் கார்களில் பாகிஸ்தான் கொடியை ஏந்தியபடி வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
  Next Story
  ×