search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ... பெண் நிருபருக்கு இச்... இச்... கொடுத்த டென்னிஸ் வீரருக்கு தடை
    X

    வீடியோ... பெண் நிருபருக்கு இச்... இச்... கொடுத்த டென்னிஸ் வீரருக்கு தடை

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு இடையே பெண் நிருபருக்கு இச்.. இச்... கொடுத்த டென்னிஸ் வீரருக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தடைவிதித்துள்ளனர்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் (ரோலண்ட் கர்ரோஸ்) தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேக்சிம் ஹமோயு இந்த தொடருக்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

    முதல் சுற்றில் மேக்சிம் ஹமோயு உருகுவேயைச் சேர்ந்த பப்லோ குயவாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் மேக்சிம் 3-6, 2-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    இந்த போட்டிக்குப்பின் ‘யூரோஸ்போர்ட்’டின் பெண் நிருபர் மாலி தாமஸ் அவரை பேட்டி கண்டார். 21 வயதான மேக்சிம் ஹமோயு கலகலப்பாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த பேட்டிங் டி.வி.யில் நேரடி ஒளிப்பரப்பாக சென்று கொண்டிருந்தது.

    பேட்டியின் இடையே மாலியை தன் இடது கையால் அணைத்துக் கொண்ட மேக்சிம், இச்... இச்... என தொடர்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். மாலிக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி நேரடியாக சென்று கொண்டிருந்ததால், அவர் உடனடியாக எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் மேக்சியை விட்டு விலக முயன்ற போதெல்லாம், மாலியை இறுக்கமாக அனைத்து முத்தம் கொடுத்தார். பின்னர் ஒரு வழியாக மாலி அவரது பிடியில் இருந்து தப்பித்தார்.

    தற்போது இந்த விவகாரம் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. ஒரு வீரர் பெண் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் அவரது அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    ‘‘இது முற்றிலும் விரும்பத்தகாத விஷயமாக இருந்தது. அவரை நான் நேரடி ஒளிப்பரப்பில் மட்டும் பேட்டி எடுக்காமல் இருந்திருந்தால், அவருக்கு ஒரு பஞ்ச் கொடுத்திருப்பேன்’’ என்று மாலி தாமஸ் கூறினார்.
    Next Story
    ×