search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறியது இந்தியா
    X

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறியது இந்தியா

    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் இரு இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    கோல்டு கோஸ்ட் :

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது குரூப்பில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, டென்மார்க்கிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 4-1 என்ற கணக்கில் சாய்த்தது.

    இந்த நிலையில் இந்த பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தோனேஷியா 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்ததால் அதிக கேம்கள் வென்றதன் அடிப்படையில் முதல் இரு அணிகள் தீர்மானிக்கப்பட்டன.

    இதன்படி டென்மார்க்கும், இந்தியாவும் முதல் இரு இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன. சுதிர்மான் கோப்பையில் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கால்இறுதியில் தோற்று இருந்தது. கால்இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த 10 முறை சாம்பியனான சீனாவுடன் நாளை மோதுகிறது.
    Next Story
    ×