என் மலர்

  செய்திகள்

  தெலுங்கு நடிகையுடன் டேட்டிங்கா?: இல்லை என்கிறார் புவனேஸ்வர் குமார்
  X

  தெலுங்கு நடிகையுடன் டேட்டிங்கா?: இல்லை என்கிறார் புவனேஸ்வர் குமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு நடிகையுடன் டேட்டிங் செல்லவில்லை, அவ்வாறு வெளியான செய்தி வதந்தி, அதை நம்ப வேண்டாம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் 26 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

  இவர் சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் கூடிய படத்தை வெளியிட்டிருந்தார்.

  அந்த படத்தில் இருந்தது தெலுங்கு நடிகை அனுஸ்ம்ரிதி சர்கார் என்றும் அவருடன் புவனேஸ்வர் குமார் டேட்டிங் சென்றதாகவும் செய்தி வெளியானது.

  இந்த செய்தி பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில் அந்த செய்து வதந்தி என்றும் அப்படத்தில் இருப்பது நடிகை அனுஸ்ம்ரிதி சர்கார் இல்லை என்றும் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தெலுங்கு நடிகையுடன் நான் டேட்டிங் சென்றேன் என்ற வதந்தி தான் எங்கும் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் படத்தில் பார்த்தது அந்த நடிகை அல்ல. ஆகையால், தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்... சரியான நேரம் வரும்போது, அந்த பெண்ணை நானே அறிமுகம் செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×