search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் குணமடையாததால் இங்கிலாந்து தொடரை புறக்கணித்தார் ஸ்டெயின்
    X

    காயம் குணமடையாததால் இங்கிலாந்து தொடரை புறக்கணித்தார் ஸ்டெயின்

    காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணித்துள்ளார் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். 33 வயதாகும் இவர், கடந்த நவம்பர் மாதம் பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின்போது காயம் அடைந்தார். அவரது தோள்பட்டையில் தசைநார் சிதைவு ஏற்பட்டது.

    இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்டெயின் தற்போது வரை ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் ஜூலை 6-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்கு ஸ்டெயின் தயாராகும் வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார்.

    ஆனால் தனது காயம் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை என்று ஸ்டெயின் உணர்கிறார். இதனால் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது.

    ரன்னிங், ஜிம் பயிற்சி மற்றும் மலையேறுதல் போன்ற விஷயங்களை செய்து வருகிறேன். ஆனால், பந்து வீசி பயிற்சி எடுக்கவில்லை. அதற்காக இன்னும் நான் தயாராகவில்லை’’ என்றார்.
    Next Story
    ×