search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி
    X

    நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

    நியூசிலாந்து-இந்தியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.
    புகெகோக் :

    இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்து-இந்தியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி புகெகோக்கில் நேற்று நடந்தது.

    இதில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் கிரான்ட் 13-வது நிமிடத்திலும், ஒலிவியா மெர்ரி 23-வது நிமிடத்திலும், ராச்செல் 43-வது நிமிடத்திலும், டீன்னா ரிட்ஷி 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் அனுபா பர்லா 31-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

    Next Story
    ×