என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் ஒரு நாள் போட்டியில் விளையாட விரும்பும் நெக்ரா
Byமாலை மலர்19 Feb 2017 2:37 AM GMT (Updated: 19 Feb 2017 2:37 AM GMT)
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஆஷிஷ் நெக்ரா, அடிக்கடி காயத்தில் சிக்குகிறார். உடல்தகுதி பிரச்சினை காரணமாக, 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. குறுகிய வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் ஆடுகிறார்.
இந்த நிலையில் நெக்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மாதம் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் நான் விளையாட விரும்புகிறேன்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். குறைந்தது இங்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டி இருக்கும். தொடக்கம், மிடில், இறுதி கட்டம் என்று எந்த பகுதியிலும் என்னால் பந்து வீச முடியும். அது மட்டுமின்றி எனது அனுபவத்தை மற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ள விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் குறைந்தது 3 ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஹசாரே கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடப்பதால், எனது உடல்தகுதியை பரிசோதித்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.

Next Story
×