என் மலர்

  செய்திகள்

  சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சமீர் வர்மா சாம்பியன்
  X

  சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சமீர் வர்மா சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லக்னோவில் நடந்து வந்த சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  லக்னோ:

  சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் சாய் பிரனீத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

  இந்திய முன்னணி வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா பெண்கள் இரட்டையரில் சிக்கி ரெட்டியுடனும், கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டியுடனும் இணைந்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்தார். இரண்டு பிரிவிலும் அஸ்வினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  Next Story
  ×