என் மலர்

  செய்திகள்

  பந்து ஸ்டம்பை தாக்கியும் அவுட்டாகாமல் தப்பிய மணீஷ் பாண்டே
  X

  பந்து ஸ்டம்பை தாக்கியும் அவுட்டாகாமல் தப்பிய மணீஷ் பாண்டே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாக்பூர் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஸ்டம்பை தாக்கினாலும் மணீஷ் பாண்டே அவுட்டில் இருந்து தப்பினார். ஏனெனி்ல பெய்ல் கீழே விழவில்லை.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

  4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. 15-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை மணீஷ் பாண்டே சந்தித்தார்.

  பந்து பேட்டில் படாமல் பின்னால் சென்று ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஸ்டம்பின் மேல் வைத்திருந்த பெய்ல் மின்னியது. ஆனால் பெய்ல் ஸ்டம்பை விட்டு கிழே விழவில்லை. பென் ஸ்டோக்ஸ் பெய்ல் கிழே விழாததால் விரக்தியடைந்தார். இதனால் மணீஷ் பாண்டே 10 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

  தொடர்ந்து விளையாடிய அவர் 26 பந்தில் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து மில்ஸ் பந்தில் க்ளீன் போல்டாகி அவுட் ஆனார்.
  Next Story
  ×