என் மலர்

  செய்திகள்

  ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை தேர்வு செய்யும்: ஜோர்டான் நம்பிக்கை
  X

  ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை தேர்வு செய்யும்: ஜோர்டான் நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். அணிகள் ஏலத்தில் என்னை கட்டாயம் தேர்வு செய்வார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 147 ரன்கள் சேர்த்தது. இதில் ஜோர்டான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து லோகேஷ் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். டெத் ஓவர் என்று அழைக்கப்படும் கடைசி ஐந்து ஓவரில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்.

  இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். தற்போது அவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி விடுவித்துள்ளது. இதனால் புதிதாக ஏலத்தில் விட இருக்கிறார். 2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது.

  இதில் நிச்சயம் ஐ.பி.எல். அணிகளால் எடுக்கப்படுவேன் என்று கிறிஸ் ஜோர்டான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து கிறிஸ் ஜோர்டான் கூறுகையில் ‘‘நான் மீண்டும் ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பிடித்துள்ளேன். நிச்சயமாக நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  கடந்த சீசனில் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்னும் ஒருபடி மேலே செல்ல நாங்கள் விரும்பினோம். சிறப்பான அந்த தொடரை நான் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். நான் மீண்டும் ஏலத்திற்கு வருவேன். என்னை ஏலத்தில் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
  Next Story
  ×