என் மலர்

  செய்திகள்

  சர்வதேச பேட்மிண்டன்: அரை இறுதியில் சிந்து
  X

  சர்வதேச பேட்மிண்டன்: அரை இறுதியில் சிந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லக்னோவில் நடந்து வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பி.வி.சிந்து வைதேகி சவுத்ரியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
  லக்னோ :

  சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 25-11 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை வைதேகி சவுத்ரியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

  ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-17 என்ற நேர்செட்டில் மலேசிய வீரர் சுல்பாட்லியை சாய்த்து அரைஇறுதியை எட்டினார். இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோரும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
  Next Story
  ×