என் மலர்

  செய்திகள்

  பிக் பாஷ் டி20 லீக்: இறுதிப் போட்டியில் நாளை பெர்த் ஸ்கார்செர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் பலப்பரீட்சை
  X

  பிக் பாஷ் டி20 லீக்: இறுதிப் போட்டியில் நாளை பெர்த் ஸ்கார்செர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்செர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
  ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் பெர்த் ஸ்கார்செர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

  கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் அரையிறுதியில் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரையிறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

  முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் அதிகபட்சமாக 27 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். பின்னர் 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது.

  அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 6 பந்தில் இரண்டு சிக்சர்ஸ், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் குவித்தது.

  பின்னர் களம் இறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியால் 6 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

  நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்செர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  Next Story
  ×