என் மலர்

  செய்திகள்

  மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஒரு போட்டியில் விளையாட தடை
  X

  மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஒரு போட்டியில் விளையாட தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா 350 ரன்களுக்கு மேல் குவித்தது. பாகிஸ்தான் பந்து வீசும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. 2 ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசவில்லை. இதனால் அந்த அணியின் வீரர்களுக்கு ஓவருக்கு 10 சதவீதம் என 20 சதவீதம் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என ஐ.சி.சி. அறிவித்தது. மேலும், கேப்டனுக்கு 40 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

  ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்திற்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியின்போதும் பாகிஸ்தான் மெதுவாக பந்து வீசியதற்காக அபாரதம் செலுத்தியிருந்தது. தற்போது 2-வது முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அணியின் கேப்டன் அசார் அலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பாகிஸ்தான் விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசார் அலி விளையாட முடியாது.

  ஒரு வருட இடைவெளிக்குள் இரண்டு முறை மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது ஐ.சி.சி.யின் விதிமுறை.
  Next Story
  ×