search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசிய மாஸ்டர்ஸ் சாம்பியன் கோப்பையை குறிவைக்கும் சாய்னா நேவால்
    X

    மலேசிய மாஸ்டர்ஸ் சாம்பியன் கோப்பையை குறிவைக்கும் சாய்னா நேவால்

    மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி வாகை சூட கடும் முயற்சி எடுத்துவருகிறார்.

    இந்த ஆண்டின் முதல் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் போட்டியான மலேசியா மாஸ்டர்ஸ் போட்டிகள் நாளை முதல் தகுதிச் சுற்றுடன் தொடங்க இருக்கிறது.

    இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் சாய்னா நேவால், முழு உடல் தகுதியுடன் இருப்பதால் பட்டம் வெல்வதற்கு கடும் முயற்சி எடுத்துவருகிறார். கடந்தாண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்ததால் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், முழு உடல் தகுதியுடன் தற்போது இந்தியாவில் நடைபெற்ற பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றார். அப்போட்டியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினார். இதனால், இம்முறை நிச்சயமாக பட்டம் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறார். சீன வீராங்கனைகள் சாய்னாவுக்கு கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்பதால் அதில் தனிக்கவனம் கொண்டு பயிற்சியெடுக்கிறார்.

    மேலும், இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் ரிதுபர்ண தாஸ் தகுதிச்சுற்றில் சீன தைபே வீராங்கனையையும், ஸ்ரீ கிருஷண பிரியா குடாரவள்ளி மலேசிய வீராங்கனையையும் எதிர்கொள்கிறார்கள். மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் சீன ஜோடியை எதிர்கொள்கின்றனர். 

    கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி ஆகியோரும் தகுதிச் சுற்றில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் காஷ்யப் பங்கேற்காத நிலையில், அஜய் ஜெயராம் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் பிரண்வ் சோப்ரா மற்றும் சிக்கி ஜோடி, முதல் சுற்றில் மலேசிய ஜோடியை எதிர்கொள்கின்றது. ஜூவாலா கட்டா மற்றும் மனு அத்ரி ஆகியோர் இந்தோனேசிய ஜோடியை எதிர்கொள்கின்றனர்.
    Next Story
    ×