என் மலர்

  செய்திகள்

  மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் செய்ய அனுமதி: ஐ.சி.சி.க்கு ஆஸி. டாக்டர் கோரிக்கை
  X

  மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் செய்ய அனுமதி: ஐ.சி.சி.க்கு ஆஸி. டாக்டர் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்று வீரராக களம் இறங்கும் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீசுவதற்கு அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஐ.சி.சி.யி்டம் கேட்டுக்கொண்டுள்ளார் ஆஸி. டாக்டர்.
  கிரிக்கெட்டின் போட்டியின்போது பேட்ஸ்மேனுக்கு திடீரென காயம் ஏற்பட்டால் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறுவார். அந்த காயம் வீரியம் மிகுந்து காணப்பட்டால் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வருவதில்லை. அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார். அதேபோல் பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் பீ்ல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். ஆனால், அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது.

  இதனால் முக்கியமான கட்டத்தில் ஒரு அணிக்கு இந்த விதி பாதகமாக அமைந்துள்ளது. இதனால் அணியின் டாக்டர் பரிசோதனையில் அந்த வீரருக்கு மூளையதிர்ச்சி அடையும் அளவிற்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரராக களம் இறங்கும் வீரரை பேட்டிங் மற்றும் பந்து வீச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  மாற்று வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச ஐ.சி.சி. பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் வலியுறுத்தியுள்ளார்.

  இதற்குக் காரணம் உள்ளது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியி்ல் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் தொடக்க வீரர் ரென்ஷாவிற்கு தலையில் பந்து தாக்கியது. அதன்பின் பீல்டிங் செய்யும்போதும் பந்து தலையில் தாக்கியது. இதனால் அவர் 2-வது இன்னிங்சில் களம் இறங்கவில்லை. தலையில் வலி இருப்பதாக தெரிவித்தார்.

  இதனால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் ஐ.சி.சி.க்கு வலியுறுத்தியுள்ளார்.
  Next Story
  ×