என் மலர்

  செய்திகள்

  2-வது டெஸ்டில் இலங்கையை 282 ரன்னில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா
  X

  2-வது டெஸ்டில் இலங்கையை 282 ரன்னில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை அணியை 282 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
  தென்ஆப்பிரிக்கா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி டீன் எல்கரின் (129) சதத்தால் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 110 ரன்னில் சுருண்டது. பிளாண்டர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  282 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

  அப்போது இலங்கையை விட தென்ஆப்பிரிக்கா அணி 506 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 507 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

  507 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது. மேத்யூஸ் 29 ரன்னுடனும், சண்டிமால் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


  பந்தை எதிர்கொள்ள திணறும் கவுசல் சில்வா

  இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சண்டிமால் மேலும் இரண்டு ரன்கள் எடுத்து 30 ரன்னில் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். மேத்யூஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ரபடா பந்தில் ஆட்டம் இழந்தார். இன்று ரபாடா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். உபுல் தரங்கா, (12), லக்மல் (10) ஆகியோரையும் வெளியேற்றினார்.


  2-வது இன்னிங்சில் 49 ரன்கள் சேர்த்த மேத்யூஸ்

  9-வது விக்கெட்டாக லஹிரு குமாராவை கேஷவ் மகாராஜ் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக 5 ரன்னில் பிரதீப்பை பிளாண்டர் வீழ்த்த, இலங்கை அணி 224 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.


  விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தோஷத்தில் ரபாடா

  2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் 12-ந்தேதி தொடங்குகிறது.
  Next Story
  ×