search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்
    X

    தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்

    தெற்காசிய மகளிர் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வங்காளசேதத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. திங்கட்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டியை உறுதி செய்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, மாலத்தீவு அணியை 6-0 என வீழ்த்தியது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி வங்காளதேச அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது.

    இந்த வெற்றியானது அணியின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்தது என்றும், அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடியதாகவும் பயிற்சியாளர் சஜித் தார் தெரிவித்தார்.
    Next Story
    ×