என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவ் சுமித் சதம்
  X

  பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவ் சுமித் சதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெல்போர்ன் டெஸ்டில் ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா 22 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னரின் 144 ரன்கள் குவிப்பால், நேற்றைய 3-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்து இருந்தது. கவாஜா 95 ரன்னுடனும், ஸ்மித் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

  இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா 97 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 54 ரன்னிலும், மேடிசன் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வாடே 9 ரன்னிலும் வெளியேறினர்.

  ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியா 113.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 465 ரன் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  தற்போது வரை ஆஸ்திரேலியா 22 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 250 ரன்கள் முன்னிலைப் பெற்று, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய வைக்க வாய்ப்புள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
  Next Story
  ×