என் மலர்

  செய்திகள்

  யூனிஸ்கான், மிஸ்பா அணியில் நீடிக்க வேண்டும்: பயிற்சியாளர் கூறுகிறார்
  X

  யூனிஸ்கான், மிஸ்பா அணியில் நீடிக்க வேண்டும்: பயிற்சியாளர் கூறுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யூனிஸ்கான் மற்றும் மிஸ்பா ஆகியோர் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கூறியுள்ளார்.
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளனர்.

  தற்போது அவர்கள் ஆட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. யூனிஸ்கான் கடைசி 8 இன்னிங்சில் சராசரியாக 12.75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிஸ்பா உல் ஹக் கடைசி 7 இன்னிங்சில் சராசரியாக 22.43 ரன்களே சேர்த்துள்ளார்.

  இன்று மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் யூனிஸ்கான் 21 ரன்னிலும், மிஸ்பா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அவர்கள் ஓய்வு பெறலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆர்தர், இவர்கள் இருவரும் அணயில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து ஆர்தர் கூறுகையில் ‘‘அவர்களை எதிர்கால முடிவு குறித்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், வீரர்கள் அறையில் அவர்களுக்கு அதிக அளவில் ஆதரவு உள்ளது. இதை மட்டும்தான் நான் கூற முடியும். ஓய்வுக்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கும்போது அவர்கள் இறுதியில் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
  Next Story
  ×