என் மலர்

  செய்திகள்

  ‘பாலன் டி ஆர்’ விருது இல்லை என்றால் செத்துவிட மாட்டேன்: நெய்மர்
  X

  ‘பாலன் டி ஆர்’ விருது இல்லை என்றால் செத்துவிட மாட்டேன்: நெய்மர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் விருது கிடைக்காவிட்டால் செத்துவிட மாட்டேன் என்று நெய்மர் கூறியுள்ளார்.
  பிரேசில் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனும், முன்னணி வீரரும் ஆன நெய்மர், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறது.

  இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக நெய்மர் கருதப்படுகிறார்.

  கால்பந்தில் சிறந்த விளங்கும் வீரருக்கு ஒவ்வொரு வருடமும் சிறந்த விருதான பாலன் டி ஆர் (தங்கபந்து) விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு (2015) மெஸ்சி இந்த விருதைக் கைப்பற்றினார். இந்த வருடம் முதன்முறையாக நெய்மர் இறுதிவரை போட்டியில் நின்றார்.

  இந்த வருடம் கிறிஸ்டியானோ ரோனால்டோ அந்த விருதை 4-வது முறையாக கைப்பற்றியுள்ளார். உலகின் சிறந்த விருதான பாலன் டி ஆர் விருது கிடைக்காவிட்டால், செத்துவிட மாட்டேன் என்று நெய்மர் கூறியுள்ளார்.

  மேலும் நெய்மர் இதுகுறித்து கூறுகையில் ‘‘பாலன் டி ஆர் விருதுதான் நோக்கம். ஆனால், அந்த விருது கிடைக்கா விட்டால் நான் செத்துவிட மாட்டேன். விருதுகளை விட எப்போதுமே சந்தோசமாக இருக்க விரும்புகிறேன். பார்சிலோனா அணியில் சந்தோசமாக இருக்கிறேன். பலோன் டி ஆர் விருதை பெறாவிட்டாலும், எதுவும் மாற்றம் ஏற்படபோவதில்லை. அந்த விருதுக்கான நான் விளையாடவில்லை. நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். ஒரே ஒரு விரர்தான் விருதை வாங்க முடியும்’’ என்றார்.
  Next Story
  ×