search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இணையாக கடைநிலை வீரர்கள் பயிற்சி: பாங்கர்
    X

    முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இணையாக கடைநிலை வீரர்கள் பயிற்சி: பாங்கர்

    முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இணையான கடைசி நிலை வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டதால்தான் இந்த வெற்றி என்று பயிற்சியாளர் பாங்கர் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என அபார வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் ஐந்து போட்டிகளையும் சந்தித்தது. இதனால் கடைசி நிலை வீரர்கள் (7 முதல் 9-ந்தேதி வரை) பேட்டிங் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    அவர்களும் இந்திய அணியின் நம்பிக்கையை சீர்குலைக்கவில்லை. அஸ்வின், சகா, ஜயந்த் யாதவ், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால்தான் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஒரு தொடரில் மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    7, 8 மற்றும் 9-வது இடத்தில் களம் இறங்கியவர்கள் இங்கிலாந்து தொடரில் 704 ரன்கள் குவித்தார்கள். சராசரி 41.41 ஆகும். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 312 ரன்கள் சேர்த்தார்கள். சராசரி 52 ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் 305 ரன்கள் குவித்தார்கள். சராசரி 30.50 ஆகும்.

    இவர்கள் சாதித்தது குறித்து பாங்கர் கூறுகையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்கு இணையாக கடைநிலை வீரர்கள் எடுத்த பயிற்சிதான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பாங்கர் கூறுகையில் ‘‘சரியான முறையில் ஏராளமான தரத்துடன், திறந்த திட்டத்துடன் பயிற்சியை மேற்கொண்டால்தான் திறமையை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட உங்களது உடல்நிலை சரியாக செயல்பட வேண்டும். அந்த கண்ணோட்டத்தில்தான் முன்னணி பேட்ஸ்மேன்கள் போன்று கடைநிலை வீரர்களும் சமமான அளவில் பேட்டிங் பயிற்சி எடுத்தார்கள்’’ என்றார்.
    Next Story
    ×