search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரஃபூல் படேல் 3-வது முறையாக போட்டியின்றி தேர்வு
    X

    இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரஃபூல் படேல் 3-வது முறையாக போட்டியின்றி தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக மூன்றாவது முறையாக பிரஃபூல் படேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவினை நீதிபதி பிபின் சந்திர கண்ட்பால் அறிவித்தார். பரூஃப் படேலின் பதவி காலம் 2017 முதல் 2020 வரை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்.  

    அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக போட்டியின்றி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பிரஃபூல் படேல், கூட்டமைப்பின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையாக நடத்துவதாக உறுதியளித்திருக்கிறார். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுக் குழுவில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.   

    2008 ஆம் ஆண்டு முன்னாள் தலைவர் ப்ரியா ரஞ்சன் தஸ்முன்ஷி மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரான பிரஃபூல் படேல் ஒரு ஆண்டு காலத்திற்கு தற்காலிக தலைவர் பதவியை வகித்து வந்தார். பின் 2009 ஆம் ஆண்டு ப்ரூஃப் படேல் கால்பந்து கூட்டமைப்பின் நிரந்தர தலைவர் பதவியேற்றார். பின் 2012 ஆம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    'அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. இந்த கூட்டமைப்பினை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவேன்', என பிரஃபூல் படேல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு கால்பந்து சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×