என் மலர்

  செய்திகள்

  ரஹானேவுக்கு விரலில் காயம்: எஞ்சிய தொடரில் ஆடமாட்டார்
  X

  ரஹானேவுக்கு விரலில் காயம்: எஞ்சிய தொடரில் ஆடமாட்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஹானே நேற்று வலை பயிற்சியின் போது காயம் அடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
  மும்பை :

  இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் 28 வயதான அஜிங்யா ரஹானே, நேற்று வலை பயிற்சியின் போது காயம் அடைந்தார். பந்து தாக்கியதில் அவரது வலது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சொந்த ஊரில் (மும்பை) விளையாடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

  இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கால் முட்டி வலியால் அவதிப்படுகிறார். 4-வது டெஸ்டுக்கான ஆடும் லெவன் அணியில் அவர் இடம் பெறுவாரா? என்பது குறித்து நாளை (இன்று) தான் முடிவு செய்யப்படும் என்றும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

  ரஹானேவுக்கு பதிலாக மனிஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமியின் காயத்தை கருத்தில் கொண்டு எச்சரிக்கை நடவடிக்கையாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகுர் அழைக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருந்த இவர்கள் உடனடியாக மும்பைக்கு சென்று அணியுடன் இணைந்தனர். என்றாலும் இருவருக்கும் இன்றைய 4-வது டெஸ்டில் களம் காண வாய்ப்பு கிடைக்காது.

  விருத்திமான் சஹா, ரோகித் சர்மா, ஷிகர் தவான் என்று காயமடைந்த வீரர்களின் வரிசையில் ரஹானேவும் இணைந்திருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகும். ரஹானே இந்த தொடரில் 5 இன்னிங்சில் 63 ரன்கள் எடுத்துள்ளார்.
  Next Story
  ×