என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதா மறைவுக்கு தெண்டுல்கர், ஆனந்த் உள்பட விளையாட்டு பிரபலங்கள் அஞ்சலி
  X

  ஜெயலலிதா மறைவுக்கு தெண்டுல்கர், ஆனந்த் உள்பட விளையாட்டு பிரபலங்கள் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா மறைவுக்கு தெண்டுல்கர், ஆனந்த் உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  தமிழக விளையாட்டு துறைக்கு யாருமே நினைத்து பார்க்க முடியாத வகையில் நவீன ஸ்டேடியங்கள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தவரும், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்-வீராங்கனைகள் சாதனை நிகழ்த்த ஊக்கம் அளிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பரிசுத்தொகைகளை அறிவித்தவருமான முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடனான தனது முந்தைய சந்திப்பு தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார். அத்துடன் ‘விளையாட்டு பிரபலங்களுக்கு ஜெயலலிதா அளித்த மதிப்பும், மரியாதையும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஸ்ரீகாந்த், அசாருதீன், ஷேவாக், முகமது கைப், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். ‘இரும்பு பெண்மணி, மக்கள் போற்றும் உண்மையான சாம்பியன்’ என்று ஜெயலலிதாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புகழாரம் சூட்டியுள்ளது. 
  Next Story
  ×