என் மலர்

  செய்திகள்

  பேட்மிண்டன் தரவரிசை: பி.வி. சிந்து 7-வது இடத்திற்கு முன்னேற்றம்
  X

  பேட்மிண்டன் தரவரிசை: பி.வி. சிந்து 7-வது இடத்திற்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, பேட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பி.வி. சிந்து, அதற்கு முந்தைய வாரம் நடைபெற்ற சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார்.

  முதன்முறையாக ‘துபாய் சூப்பர் சீரிஸ் இறுதி’ தொடருக்கு தழுதி பெற்ற அவர், பேட்மிண்டன் தரவரிசையில் முதன்முறையாக 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது பி.வி. சிந்து 68699 புள்ளிகள் பெற்றுள்ளார்.

  முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நேவால் கடந்த வாரம் 11-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஆண்களுக்கான தரவரிசையில் ஸ்ரீகாந்த் 13-வது இடத்தையும், ஹாங்காங் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சமீர் வர்மா 13 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி - பி. சுமீத் ரெட்டி ஜோடி 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  Next Story
  ×