என் மலர்

  செய்திகள்

  பயிற்சி நிறைவு பெற்ற தமிழக கால்பந்து வீராங்கனைகளை படத்தில் காணலாம்.
  X
  பயிற்சி நிறைவு பெற்ற தமிழக கால்பந்து வீராங்கனைகளை படத்தில் காணலாம்.

  தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகளுக்கான பயிற்சி நிறைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை இம்பாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகளுக்கான ஒரு வாரமாக பயிற்சி நிறைவு பெற்றது.
  அறச்சலூர் :

  இந்திய விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற உள்ளது. இதில் 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழகம் சார்பில் கவி பரமேஸ்வரி, ஸ்ரீநிதி, அர்ச்சனா, அபிநயா, பாண்டிசெல்வி, நாமக்கல் மாவட்டம் மாரியம்மாள், தேவி, துர்கா, சென்னை மணிஷ், ஆர்த்தி, திருவாரூர் பவித்ரா, கனிமொழி, பிரியதர்ஷினி, திண்டுக்கல் ரவிசனா, நெய்வேலி ஜக்கிய அப்ரின், சேலம் சந்தியா, தாமரை செல்வி, நர்மதா ஆகிய 18 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த அணிக்கு கவி பரமேஸ்வரி கேப்டனாக செயல்படுகிறார். இவர்களுக்கு ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகபட்டி ராஜேந்திரன் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பயிற்சி நடைபெற்று வந்தது.

  பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி சி.பெ.மகாராஜன் 18 வீராங்கனைகளுக்கும் சீருடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேசன் (பொறுப்பு), பள்ளிக்கூட தாளாளர் மாலதி ராஜேந்திரன், மக்கள் ராஜன், பள்ளிக்கூட முதல்வர் பிரபா நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×