என் மலர்

  செய்திகள்

  ஹாங்காங் பேட்மிண்டன்: சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேற்றம் - அஜய் ஜெயராம் அவுட்
  X

  ஹாங்காங் பேட்மிண்டன்: சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேற்றம் - அஜய் ஜெயராம் அவுட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹாங்காங் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதே சமயத்தில் அஜய் ஜெயராம் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
  ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் உள்ளூர் வீரரான என்.ஜி. கா லாங் அங்குசை எதிர்கொண்டார். இதில் 15-21, 14-21 என நேர்செட் கணக்கில் ஜெயராம் தோல்வியடைந்து காலிறுதியுடன் வெளியேறினார்.

  மற்றொரு காலிறுதியில் சமீர் வர்மா, மலேசியாவின் வெய் சாங்கை எதிர்கொண்டார். இதில் 21-17, 23-21 என நேர்செட் கணக்கில் சமீர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  இந்தியா சார்பில் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். சூப்பர் சீரிஸ் லெவல் தொடரில் முதன்முறையாக சமீர் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×