என் மலர்

  செய்திகள்

  மொகாலி டெஸ்ட்: பட்லர், வோக்ஸ் விளையாடுகிறார்கள்
  X

  மொகாலி டெஸ்ட்: பட்லர், வோக்ஸ் விளையாடுகிறார்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொகாலி டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது டெஸ்ட் மொகாலியில் நாளை தொடங்குகிறது.

  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆண்டர்சன் இடம்பெற்றதால் கிறிஸ் வோக்ஸிற்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அந்த அணியின் ஸ்டூவர்ட் பிராட் காயம் அடைந்துள்ளதால் மொகாலி டெஸ்டில் அவர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் விளையாடுகிறார். இவர் ராஜ்கோட் டெஸ்டில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

  அதேபோல் அந்த அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் களம் இறக்கப்பட இருக்கிறார்.  சுழற்பந்து வீச்சாளர் சாபர் அன்சாரி உடல்நலக்குறைவால் நாளைய டெஸ்டில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று சுழற்பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா? அல்லது வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா? என்பது ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×