search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பாண்டிங் விருப்பம்
    X

    ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பாண்டிங் விருப்பம்

    தொடர் தோல்வியால் தவிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    சிட்னி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்று தொடரை இழந்துவிட்டது.

    2-வது டெஸ்ட் போட்டியில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக 5 டெஸ்டில் தோல்வியை தழுவி உள்ளது.

    இதையடுத்து ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவராக இருந்த ராட் மார்ஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் பதவி அல்லது தேர்வு குழு தலைவர் பதவியை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டுவர என்னால் முடிந்ததை செய்வேன். இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருக்கிறேன்.

    எந்த பதவி கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் பணிபுரிவேன். முழுநேர பயிற்சியாளர் பதவி பற்றி நிறைய பேச வேண்டும் என்றார்.

    ரிக்கி பாண்டிங் 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு வர்ணனையாளராக பணியாற்றினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

    தற்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக டேரன் லீமேன் உள்ளார். அவரை 2013-ம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்க ரிக்கி பாண்டிங்தான் பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×