என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.சி.சி.ஐ. நிர்வாகிகளை தகுதி நீக்கம் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டில் லோதா குழு பரிந்துரை
Byமாலை மலர்21 Nov 2016 12:26 PM GMT (Updated: 21 Nov 2016 12:26 PM GMT)
பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் லோதா குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக செயல்படக்கூடாது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பி.சி.சி.ஐ.யில் செயல்படக்கூடாது உள்பட பல்வேறு அதிரடியான பரிந்துரைகள் அதில் இடம் பெற்று இருந்தது.
இதில் பெரும்பாலான பரிந்துரைகளை பி.சி.சி.ஐ. ஏற்காத நிலையில், லோதா குழு இன்று மற்றொரு அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோர்க்கைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் லோதா குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் செயல்படுத்த முடியாது என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பர் 3-ம் தேதிக்குள் லோதா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் 13 மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
×