என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி
Byமாலை மலர்21 Nov 2016 8:23 AM GMT (Updated: 21 Nov 2016 8:23 AM GMT)
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
விசாகப்பட்டினம்:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன் குவித்தது. கேப்டன் விராட் கோலி(167) மற்றும் புஜாரா(119) அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பென் ஸ்டோக்ஸ் 70 ரன்னும், ஜோரூட், ஜானி பேர்ஸ்டோவ் தலா 53 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 67 ரன் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து 200 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட் கோலி அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் பிராட் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனையடுத்து, 405 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று பிற்பகலில் ஆட்டத்தை தொடங்கியது. ஆட்ட நேர இறுதி இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இன்று 5-ம் நாளில் இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. தொடக்கம் முதலே மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் இங்கிலாந்து அணி 97.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் மற்றும் புதுமுக வீரர் ஜெயந்த் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முதல் இன்னிங்சில் 167 ரன்கள், 2-வது இன்னிங்சில் 87 ரன்கள் எடுத்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
×