என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: பி.வி.சிந்து பங்கேற்கிறார்
Byமாலை மலர்18 Oct 2016 4:22 AM IST (Updated: 18 Oct 2016 4:22 AM IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி:

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சே நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் நாளை நடைபெறும் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை சந்திக்கிறார்.
ஆகஸ்டு மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியதால் தொடர்ந்து பாராட்டு மழையிலும், பரிசு குவியலிலும் மூழ்கிய பி.வி.சிந்து அதன் பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வரும் சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த போட்டியில் இந்தியா தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களம் காணுகிறார்.
சமீபத்தில் நடந்த நெதர்லாந்து ஓபன் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் நாளை நடைபெறும் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்து வீரர் பூன்சாக் பொன்சனாவை எதிர்கொள்கிறார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மற்ற இந்திய வீரர்களான சாய் பிரனீத், தாய்லாந்து வீரர் தானோன்சாக்கையும், பிரனாய் தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரரையும் சந்திக்கிறார்கள்.
இன்று நடைபெறும் முதலாவது சுற்று ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் காஷ்யப், எஸ்தோனியா வீரர் ரால் முஸ்ட்டுவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமித் ரெட்டி, பிரனாவ் ஜெர்ரி-அக்ஷய் தேவால்கர் ஆகியோரும், கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனாவ்-சிக்கி ரெட்டி ஆகியோரும் இந்தியா சார்பில் களம் காணுகிறார்கள்.

Next Story
×