என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இசான் மணி வேண்டுகோள்
  X

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இசான் மணி வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இசான் மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.
  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், பாகிஸ்தானை சேர்ந்தவருமான இசான் மணி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் முதிர்ச்சியற்ற முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

  அவரது பேச்சு கிரிக்கெட் ஆட்டத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அவர் எந்த வகையில் இந்த மாதிரியாக பேசுகிறார் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரிடம் விசாரிக்க வேண்டும்.

  அடுத்த வாரம் நடக்க இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவில் ஐ.சி.சி. போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை வற்புறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
  Next Story
  ×